Tamil computing group
 help / color / mirror / Atom feed
From: Arun Isaac <arunisaac@systemreboot.net>
To: Anderson Ivanovich <ivanovicha350@gmail.com>
Cc: tamil@systemreboot.net
Subject: Re: Translated PO File for PSPP-2.0.0-pre2
Date: Wed, 05 Jul 2023 11:20:22 +0100	[thread overview]
Message-ID: <87v8eywtg9.fsf@systemreboot.net> (raw)
In-Reply-To: <87a5wcy60u.fsf@systemreboot.net>


வணக்கம் அன்பரசன்,

உங்கள் அருஞ்சொற்களஞ்சியத்தைப் பெரும்பாலும் நம் வலைத்தளத்திலுள்ள அருஞ்சொற்களஞ்சியத்துடன்
சேர்த்துவிட்டேன்.

https://git.systemreboot.net/tamil-computing/commit/?id=7aca6d5491b79d79edeab50577fed35b27113f90
https://tamil.systemreboot.net/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

ஆனால் சிலச் சொற்களை விட்டுவிட்டேன். அதற்குக் காரணத்தைக் கீழ் விளக்குகிறேன். சேர்த்த
சிலவற்றைக் கொஞ்சம் மாற்றியுமுள்ளேன். அதில் உங்களுக்கு உடன்பாட்டிருக்கிறதாவெனச்
சொல்லுங்கள்.

> standard deviation "தர விலக்கம்"
> standard error "தர பிழை"

இங்கு standard என்பது தரத்தைக் (அதாவது quality) குறிப்பதல்ல. ஆனால் இதை வேறு
எவ்வாறு தமிழாக்குவதென அறியேன்.

> logistic "இடப்பெயர்வு"

பொருட்களை இடம்பெயர்த்தல் என்னும் logistics வேறு, கணிதத்தில் வழங்கும் logistic
function வேறு. https://en.wikipedia.org/wiki/Logistic_function#History காண்க.

> locale "நிகழ்வு இயலிடம்"

locale என்பது சரியான மொழியையும் மொழி சார்ந்த பிற வழக்கங்களையும் தேர்ந்தெடுப்பதற்குப்
பயன்படுத்தப்படும் அமைவு (setting). இதை நான் வட்டாரம் எனத் தமிழாக்குவதுண்டு. அதைப்
பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

> aggregate "ஓன்றாக்குதல்"
> anti image "எதிர்படம்"

> archive "காப்பகக்கோப்பு"

archive எப்போதுமே காப்புப்படியாக (backup) அமைக்கப்படுவதில்லை. அதுப் பலக்
கோப்புகளை ஒரேக் கோப்பாக்கும் களஞ்சியமாகக் கூட இருக்கலாம். அதனால் அதைப் பல இடங்களில்
களஞ்சியம் அல்லது களஞ்சியக்கோப்பு எனவும் சொல்லலாம்.

> attribute "பண்பு"

attribute என்பதைப் பண்புக்கூறு எனவும் சொல்லலாம். coreutils தமிழாக்கத்தில் இதைப்
பண்புக்கூறு என்றே தமிழாக்கியுள்ளோம்.

> dummy "போலி"
> duplicate "நகல்"
> eigen value "ஐகன் மதிப்பு"
> endian "எண்டியன்"
> chi square "கை வர்க்கம்"
> r square "ஆர் வர்க்கம்"

இவை வேற்றுமொழிச் சொற்களென நினைக்கிறேன். நல்ல தமிழ்ச் சொற்கள் கிடைத்தால் நன்று. அது
வரை இவற்றை நம் அருஞ்சொற்களஞ்சியத்தில் சேர்க்க வேண்டாம்.

> gnu "ஞு"
> gnumeric "ஞுமரிக்"

gnu என்பதை குனு அல்லது குனூ என்றே உச்சரிப்பர். அதனால் அவ்வாறே கொள்ளலாமா?

> frequency "அலைவெண்"

அலைவெண் என்பது அலைகள் பற்றி (wavelength, frequency, etc.) கூறும் போது
பயன்படுத்தப்படும் சொல். ஆனால் புள்ளியலில் இது வேறு. நிகழ்வெண் எனக் கொள்ளலாமா?

> model "படிமம்"

இதை ஒப்புரு எனக் கொண்டால் என்ன? ஒன்றை ஒத்த உரு உடையதால் ஒப்புரு. படிமம் என்றால் copy
போல் தோன்றுகிறது. model என்பது ஒன்றை ஒத்த பலப் பண்புகள் உடையது, ஆனால் எல்லாப்
பண்புகளிலும் அல்ல. அதனால் அதை copy எனக் கூற இயலாது.

> absolute "முழுமையான"
> active "செயல்பாட்டிலுள்ளது"
> adjusted "ஒழுங்காக்கப்பட்டது"
> approximately "தோராயமாக"
> batch "திரள்"
> cases "வழக்குகள்"
> category "வகையினம்"
> cluster "திரள்"
> expansion "விரிவாக்கம்"
> element "உருப்படி"
> extraction "பிழிந்தெடுத்தல்"
> descriptor "விவரிப்பி"
> factor "காரணி"
> format "வடிவமைப்பு"
> trimmed "வெட்டப்பட்ட"
> truncate "வெட்டுதல்"
> temporary "இடைக்காலம்"
> total "மொத்தம்"
> dichotomy "இருமைகள்/இருமைத்தன்மை"
> difference "வேறுபாடு"
> exact "துல்லியம்"
> identifier "இனங்காட்டி"
> independent "சார்பற்றது"
> index "சுட்டு"
> corrupt "பழுதடைந்துள்ளது"
> offset "ஈடுசெய்"
> inflator "ஊதி"
> observed "நோக்கப்பட்டது"
> seeking "நாடிச்செல்லுதல்"
> separator "பிரிப்பி"
> significance "மிகைத்தன்மை"
> specification "தனிக்குறிப்பீடு"
> specificity "குறிப்புத்தன்மை"
> specifier "குறிப்பி"
> macro "பெருமம்"
> numeric "எண்வகை"
> histogram "அலைவெண் செவ்வகப்படம்"
> scalar "திசையிலி"
> scale "அளவு"
> regular "வழக்கமான"
> nominal "பெயரளவு"
> operands "செயலுட்படுத்தி"
> symmetric "சீரொருமை"
> repetitions "மீள்நிகழ்வுகள்"
> argument "வாதம்"
> log "குறிப்புப்பதிவு"
> extreme "உச்சம்"
> criteria "கட்டளை விதி"
> loop "மடக்கு"
> cumulative "ஒட்டுமொத்தம்"

மேற்காண்பவற்றில் பலவற்றிற்கு இடம் அறியாது பொருள் காண்பது கடினம். ஒவ்வொரு இடத்திலும்
ஒவ்வொரு விதமாக தமிழாக்க வேண்டும். மேலும் சில (total, adjust, approximately,
numeric, etc.) மிகப் பொதுவான சொற்கள் என்பதால் அவற்றைக் கலைச்சொற்கள் பட்டியலில் சேர்க்க
வேண்டாமென நினைக்கிறேன். அதைத் தமிழாக்கரே இடம் அறிந்து பொருள் கண்டு தமிழாக்க
விட்டுவிடலாம். இன்னும் சிலக் (operand, histogram, cumulative)
கலைச்சொற்களேயாயினும் அவற்றிற்கு இன்னும் நல்ல தமிழாக்கங்கள் வேண்டும் அல்லது இன்னும் கொஞ்சம்
பொருள் தெளிவு வேண்டும். இச்சொற்கள் அடுத்த முறை தோன்றும்பொழுது இவற்றைப் பற்றி மீண்டும்
பேசலாம். ஏதாவது சொல்லைக் கண்டிப்பாக சேர்க்க வேண்டுமென்று வன்மையான கருத்திருந்தால்
சொல்லுங்கள்.

நன்றி,
அருண்.

      reply	other threads:[~2023-07-05 10:20 UTC|newest]

Thread overview: 3+ messages / expand[flat|nested]  mbox.gz  Atom feed  top
     [not found] <CAH6zCLPn0rUyv3B8=zWpj2N5j8fuK7rv+ueR1-aBGDZNL5=c0Q@mail.gmail.com>
2023-06-23 21:31 ` Arun Isaac
2023-07-03 22:38   ` Arun Isaac
2023-07-05 10:20     ` Arun Isaac [this message]

Reply instructions:

You may reply publicly to this message via plain-text email
using any one of the following methods:

* Save the following mbox file, import it into your mail client,
  and reply-to-all from there: mbox

  Avoid top-posting and favor interleaved quoting:
  https://en.wikipedia.org/wiki/Posting_style#Interleaved_style

* Reply using the --to, --cc, and --in-reply-to
  switches of git-send-email(1):

  git send-email \
    --in-reply-to=87v8eywtg9.fsf@systemreboot.net \
    --to=arunisaac@systemreboot.net \
    --cc=ivanovicha350@gmail.com \
    --cc=tamil@systemreboot.net \
    /path/to/YOUR_REPLY

  https://kernel.org/pub/software/scm/git/docs/git-send-email.html

* If your mail client supports setting the In-Reply-To header
  via mailto: links, try the mailto: link
Be sure your reply has a Subject: header at the top and a blank line before the message body.
This is a public inbox, see mirroring instructions
for how to clone and mirror all data and code used for this inbox